2026இல் கண்ணிவெடிகள் இல்லாத நாடாக இலங்கை!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரினால் பல இடங்களில் இராணுவத்தினராலும், விடுதலைப்புலிகளினாலும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன.

2009ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த பின்னர், கண்ணிவெடி அபாயத்தினால் மக்களை மீள் குடியேற்றுவதில் பாரிய தடங்கல்கள் ஏற்பட்டது.

இதுவரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பிலிருந்து, எட்டு இலட்சத்திற்கும் அதிகமான கண்ணிவெடிகள் மற்றும் தாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள் என்பன அகற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்திற்கு, சர்வதேச உதவி நிறுவனங்களிடமிருந்து வருடந்தோறும் 17.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியாகக் கிடைக்கப் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles