கமல்ஹாசனின் அரசியல் பயணத் தொடக்கத்திலேயே அரசியல் விளையாட ஆரம்பித்துள்ளது

மூத்த நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று (21/02) முன்னாள் இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த திரு. அப்துல்கலாம் வீட்டிலிருந்து ஆரம்பித்தார்.

இந்நிலையில் இன்று காலை இராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்குச் செல்ல நினைத்த கமலுக்கு அனுமதி இல்லை என மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த தடைவிதிப்பின் பின்னணியில் முழு அரசியல் உள்ளதென்பதை தெளிவாக உணரமுடிகிறது.

இதுபற்றி கமல்ஹாசன் தெரிவிக்கையில், “நான் பள்ளிக்குச் செல்வதை தான் தடுக்க முடியுமே தவிர. பாடம் படிப்பதைத் தடுக்க முடியாது. ‘தடைகளை வென்றே சரித்திரம் படைப்பவன்’ என என் படத்தின் பாடல் வரும். அப்படித்தான் படிக்க வேண்டும் என்றால் அதையும் செய்யலாம்.” என்று குறிப்பிட்டார்.

 

Latest articles

Similar articles