ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படுகொலையில் பிள்ளையானுக்கு நேரடித் தொடர்பு !!

2005ம் ஆண்டு நத்­தார் தின நள்­ளி­ரவு ஆரா­த­னை­யின்­போது, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோச பர­ரா­ஜ­சிங்­கம் சுட்­டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிள்ளையானுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக முதலாம், மற்றும் இரண்டாம் எதிரிகள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றம் ஏற்­றுக்கொண்­டுள்ளது.

பிள்ளையான் எனப்படும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தன் உட்பட ஆறு பேர் சேர்ந்தே இந்தப் படுகொலையை செய்தோம் என முதலாம், மற்றும் இரண்டாம் எதிரிகள் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படுகொலைக்கு யார் உத்தவிட்டார்கள் என்று பிள்ளையான் ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவாரா?? கொலை செய்ய உத்தரவிட்டவர்களை நீதிமன்றம் கண்டு பிடிக்குமா?? போன்றவற்றை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2005ல் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் படுகொலை இடம்பெற்று சரியாக மூன்று வருடங்களில், மகிந்த ராஜபக்ச பிள்ளையானை கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக நியமித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles