இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தமிழர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ – ISRO) தலைவராக கே.சிவன் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கே.சிவன் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். 104 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்திய சாதனைக்கு மூளையாக செயல்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. வரும் 12ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பதவியேற்கவுள்ள கே.சிவன் மூன்றாண்டுகளுக்கு பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles