இலங்கையில் நடந்த கொடூர தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமா IS உரிமை கோரியுள்ளது.

ஏழு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதில் தமது உறுப்பினர்கள் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ஐந்து நட்சத்திர விடுதிகளில் தனித் தனியாக தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள் என்றும், இறுதியான ஒருவர் தெமட்டகொட வீட்டில் காவல்துறையினருடன் சண்டையிட்டு, அவர்களைக் கொன்று தானும் இறந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெஹிவளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவோ அல்லது அதில் இறந்தவர்கள் தொடர்பாகவோ எந்த ஒரு அறிவிப்பும் அந்த அறிக்கையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான ஒரு குரூர மனநிலையை அந்த அறிக்கையில் வெளிப்படுத்தி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
