இலங்கையின் தேசிய இளைஞர் சேவையின் தலைவர் பதிவியிலிருந்து அண்மையில் பதவி விலகிய பாடகர் இராஜ் வீரரத்ன தன்னைபற்றி வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ச தன்னை கன்னத்தில் அறைந்ததாக வெளியான செய்தி பொய்யானது என தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியான பின்னர் தான் யோஷிதவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்ரீதியான மாற்றம் ஒன்று ஏற்படுமென நம்பியே கடந்த 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒன்றினைந்து செயற்பட்டேன். மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் தற்போது மூர்க்கத்தனமான செயற்பட்டுவருகிறது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளுக்கெல்லாம் தான் பொறுப்பு கூற முடியாதென தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழியில் இராஜ் வீரரத்ன வழங்கிய முழுமையான பேட்டியை கீழுள்ள யூடியுப் பக்கத்தில் பார்க்கலாம்.