இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது

நாக்பூரில் நேற்று (24-11) ஆரம்பமான இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
Chandimalநாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி,இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 205 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் சந்திமால் 57 ஓட்டங்களையும், F.D.M.கருணாரட்ன 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் அஸ்வின் 4 விக்கட்டுகளையும், ஜடேஜா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

Ashwinகொல்கத்தா ஈடன்காடனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்துமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles