பிணையில் எடுக்க இரண்டு இலட்சம் டொலர்கள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய சிறையில் உள்ள இலங்கை துடுப்பாட்ட அணியின் தனுஷ்க குணத்திலகவின் இரண்டாவது பிணை விண்ணப்பத்திற்காக இரண்டு இலட்சம் ஆஸ்திரேலிய டொலர்களைத் திரட்டுவதில் இலங்கை துடுப்பாட்ட நிறுவனம் (Sri Lanka Cricket) கடும் நெருக்கடியில் உள்ளது.

இலங்கை துடுப்பாட்ட நிறுவனம் ஏற்கனவே தனிப்பட்ட பலரிடம் நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும், இலங்கை துடுப்பாட்ட அணியின் மற்றுமொரு வீரரான வணிந்து ஹஸரங்க ஏற்கனவே பெருந்தொகை பணத்தினை வழங்கியுள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய நீதிமன்றால் ஏற்கனவே பிணை மறுக்கப்பட்டிருந்த நிலையில் தனுஷ்க குணத்திலக சிறையில் உள்ளார். இவரின் வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 12இல் இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே தனுஷ்க குணத்திலகவினை பிணையில் எடுக்கும் பணிகள் மும்மரமாக இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest articles

Similar articles