ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இலங்கை துடுப்பாட்ட அணி வீரர் தனுஷ்க குணதிலக மாகாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதான தனுஷ்க குணதிலக சிட்னி நகரில் 29வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தமை உட்பட நான்கு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி தனுஷ்க குணதிலகவிற்கு பிணை வழங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்தார். இதனால் நாளை திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும்வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்.
