சிம்பாவே கிரிக்கெட் அணி சர்வதேச இருபதுக்கு இருபது (T20) கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளது.
கம்பியாவிற்கு எதிராக இடம்பெற்ற தகுதிகான் போட்டியில் சிம்பாவே அணி 344 ஓட்டங்களைக் குவித்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.
4 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்ற சிம்பாவே அணியில் சிக்கந்தர் ரஸா 133 ஓட்டங்களைப் பெற்றார். இதுவே சிம்பாவே அணியில் T20 போட்டியில் ஒரு வீரர் பெற்ற முதலாவது சதமாகும்.
கடந்த வருடம் நேபாளம் அணி மொங்கோலியாவிற்கெதிராக பெற்ற 314 ஓட்டங்களே இதுவரை உலக சாதனையாக இருந்தது.