புலிகளுடன் நேருக்கு நேர் சண்டையிட்டவர் எனக் கூறப்படும் முன்னாள் இராணுவ வீரரான ஜனாதிபதி, பெண்களான எம்மைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும்? என ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடித் தீர்வை காணுமாறு வலியுறுத்தி சமகி வனிதா பலவேகய எனும் மகளிர் அணி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஹிருணிகா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்மை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது. இருப்பினும் நாம் இதற்கு அஞ்சப்போவதில்லை. இது ராஜபக்சக்களின் நாடு அல்ல. அவர்கள் வெறும் வர்த்தகர்கள்தான். அவர்கள் நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு தப்பித்துவிடுவார்கள்.இது எமது நாடு, ராஜபக்ச கூட்டத்திடமிருந்து நம் நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.



