ஹெய்ட்டியில் பாரிய பூகம்பம், 304பேர் உயிரிழப்பு

கரீபிய நாடான ஹெய்ட்டியில் இடம்பெற்ற பாரிய பூகம்பத்தில் இதுவரை 304பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,800 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

7.2 மக்னிடியூட் அளவில் பதிவான பூகம்பத்தால் பல பாரிய கட்டடங்கள் தரை மட்டமாகியுள்ளன. ஹெய்ட்டி அதிபர் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இடிந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் இடம்பெற்றுவருகிறது.

2010இல் ஹெய்ட்டியில் இடம்பெற்ற பூகம்பத்தில் 200,000 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles