ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி

இலங்கையில் நேற்று (16/11/19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுன அணியில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச 69 இலட்சங்களுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் இனப்படுகொலையுடன் தொடர்புடையவர் என மனித உரிமை அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்ட கோத்தபாய ராஜபக்சவிற்கு பெரும்பாண்மை சிங்கள மக்கள் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர்.

இவர் நாளை (18/11) இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள முப்படைகளும் ஜனாதிபதியியாக பதவி வகிப்பவரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 😢 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles