தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்றார்

இலங்கையின் பிரபல தொழிலதிபரும், பொதுஜன பெரமுணவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சிற்கு தம்மிக்க பெரேராவை நியமிப்பதன் மூலம், பல மேற்குலக நாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்க முடியுமென இலங்கை அரசாங்கம் நம்புகின்றது.

இருப்பினும் இந்திய-சீன அரசாங்கங்களின் தலையீடு இலங்கையில் அதிகமாக இருப்பதால், மேற்குலக நாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருகிறார்கள்.

தம்மிக்க பெரேராவினால் சில ஆசிய நாடுகளின் உதவியுடன் இலங்கை கலாச்சாரத்திற்கு ஒத்துவராத சூதாட்டம், இரவு நேர களியாட்டம் போன்ற துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க சாத்தியம் அதிகமுண்டு!

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles