மசகு எண்ணெய் விலை பெருமளவில் அதிகரிப்பு

உக்ரைன் – ரஷ்யா போரினால் எரிபொருள் சந்தையில் மசகு எண்ணெய் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது. 

ஒரு பரல் மசகு எண்ணெய்யின் விலை 110 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏழு வருடங்களில் காணப்படும் அதிகபட்ச விலையாகும்.

இதேவேளை இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் மோசமடைந்து வருகின்றது. 37,000 மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வரும் கப்பலுக்கு அரசாங்கம் இன்னும் பணம் செலுத்தவில்லை. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் மிக நீண்ட வரிசையில் காத்து நிக்கின்றமையை நாடு பூராகவும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles