பரிசோதனை செய்யப்பட்ட 150 பேரில், 69 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள மினுவாங்கொட பிரதேசத்தில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணி புரியும் பெண் ஒருவருக்கு நேற்றைய தினம் (04/̀10) கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முதற்கட்டமாக 150 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இது மேலும் பல மடங்கு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயமுள்ளதால், அனைத்துப் பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,471 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 3,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles