2,000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கும் சீனா

சீன அரசாங்கம் இலங்கைக்கு 2,000 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்கவுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2.5 அமெரிக்க மில்லியன் டொலர்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான 65 வருட இராஜதந்திர உறவுகளைப் பேணிவரும் சீனா, வர்த்தகரீதியாக இறப்பர்-அரிசி ஒப்பந்தம் மேற்கொண்டு 70 வருடங்களையும் நிறைவு செய்கிறது.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டினை அடுத்து, இலங்கை அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவசர உதவியாக 2,000 மெற்றிக் தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்குவதாகவும் சீனா அறிவித்துள்ளது.

Latest articles

Similar articles