சீனாவில் பயணிகள் விமானம் விபத்து

சீனாவின் குவாங்ஸி மாநிலத்தில் China Eastern விமான சேவையின் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

123 பயணிகள் மற்றும் 09 விமான பணியாளர்களுடன் பயணித்த போயிங் 737-800 ரக பயணிகள் விமானமே விபத்துக்குள்ளானதாக சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழப்பு விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

விபத்து இடம்பெற்ற மலைப் பகுதியில் பாரிய தீ பரவியுள்ளது. மேலும் மீட்டுப் பணியாளர்கள் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

27/03/22 
Update : இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles