ஆங்கில பிரீமியர் லீக், செல்ஸீ அணி ஆறுதல் வெற்றி

இன்று (13/02) இங்கிலாந்தில் நடைபெற்ற ஆங்கில பிரீமியர் லீக் கிண்ணத்திற்கான போட்டியில், செல்ஸீ அணி வெஸ்ட் ப்ரொம்விச் அல்பியன் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அணியின் முன்னணி வீரர்களான ஈடன் ஹாஸார்ட் இரண்டு கோல்களையும் மற்றும் விக்டர் மோசஸ் ஒரு கோலையும் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.


(படம் : செல்ஸீ
)

ஆங்கில பிரீமியர் லீக் கிண்ணத்திற்கான போட்டிகளில், கடந்த இருமுறை தொடர் தோல்விகளால் துவண்டிருந்த செல்ஸீ அணிக்கு இந்த வெற்றி ஓரளவு நிம்மதியை தந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் செல்ஸீ அணி நான்காம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. மான்செஸ்டர் ஸிட்டி அணி தொடர்ந்தும் 72 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

கடந்த முறை சாம்பியனான செல்ஸீ அணி இந்த தடவை மோசமாக விளையாடுவதன் காரணமாக அணியின் பயிற்சியாளரை நீக்குவதற்கான முயற்சியில் அணியின் முகாமைத்துவக்குழு ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles