41 பயணிகளின் உயிரைப் பறித்த செல்போன்

இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் நடியா பகுதியில் பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசிக் கொண்டே ஒரு வளைவில் பேருந்தை திருப்ப முயற்சித்த போது, கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளாகி கால்வாய்க்குள் வீழ்ந்ததில் 41 பயணிகள் உயிரிழந்தனர்.

தகவல் கொடுக்கப்பட்டு பல மணி நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் மீது பொதுமக்கள் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்துப் நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles