ஜனவரி முதல் கொழும்பில் பிச்சைக்காரர்களுக்குத் தடை

ஜனவரி முதலாம் திகதி முதல் கொழும்பு நகரத்தில் பிச்சை எடுத்தல் முற்றாக தடை செய்யப்படுகிறது என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தமது அமைச்சு கொழும்பு மாநகர சபையுடன் சேர்ந்து செய்த ஆய்வில், 600 பிச்சைக்காரர்கள் வரையில் கொழும்பு நகரினுள் பிச்சை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கவும் மற்றும் கொழும்பு நகரை அழகுபடுத்தல் போன்ற காரணங்களுக்காக இந்த தடைவிதிப்பு அமுல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

கொழும்பு நகரிலிருந்து அகற்றப்படும் பிச்சைக்காரர்களுக்கு, அமபலாங்கொடை, ரிதிகமவில் 80 மில்லியன் ருபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புணர்வாழ்வு நிலையத்தில் புணர்வாழ்வளிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்கு பாடசாலைக் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles