பசில் ராஜபக்ச ராஜினாமா

பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்ச தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

புதிய அரசியல் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள பசில் ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தானாகவே நீக்கப்பட்டிருப்பார். அதற்கு முன்னதாக தானாகவே பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு காரணத்தினால், எவ்வித நிதி சம்பந்தமான அறிவு, அனுபவமின்றி கடந்தகாலத்தில் நிதி அமைச்சராகவும் பசில் ராஜபக்ச பதவி வகித்து, இலங்கையின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles