முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மல்வானை மாளிகை வீட்டிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
முதலில் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய மக்கள், பின்னர் வீட்டினுள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கிய பின்னர், வீட்டிற்கு தீ மூட்டினர்.
பின்னர் நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் ஸ்தலத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.