தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் விடுதலைப் புலிகள் வெளியேற்றம்

​புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட “தமிழ் விடுதலைப் புலிகள்” அமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்(f), தமிழ் விடுதலைப் புலிகள் உட்பட ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய அணியே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகும்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச்செய்து, தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதே இந்திய கொள்கை வகுப்பாளர்களின் பிரதான நோக்கமாக இருந்தது என்பது குறிபிடத்தக்கது. இந்த நோக்கத்திற்காக ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரை இந்தியா இலகுவாக பயன்படுத்தி இருந்தது.

தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் விலகல் தொடர்பாக முழுமையான அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்.

 

Latest articles

Similar articles