சங்கானை குருக்கள் கொலை வழக்கு, இராணுவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

சங்கானையில் ஆலய குருக்களின் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு குருக்களை கொலை செய்து, வாளால் வெட்டி குருக்களின் இரு புதல்வர்களுக்கு படுகாயங்களை ஏற்படுத்தி, நகைகளையும், ஈருருளியையும் களவாடிச் சென்ற இராணுவ கொலைகாரர்களுக்கு இன்று யாழ் மேலதிக நீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எட்டு வருடங்களின் பின்னர் முடிவிற்கு வந்த இந்த வழக்கில், இராணுவ சிப்பாயான பேதுரு குணசேனா, மற்றும் இராணுவ தமிழ் புலனாய்வாளர்களான காசிநாதன் முகுந்தன், பாலசுப்பிரமணியம் சிவரூபன் ஆகியோருக்கே மரண தண்டனை வழங்கப்பட்டது.

குருக்களின் கொலையின் பின்னர், சங்கானை முருக மூர்த்தி ஆலயத்திற்கு அருகில் இலங்கை இராணுவம் நிரந்தரமாக ஒரு முகாமை அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

Latest articles

Similar articles