புதினம்
National news
இலங்கை அமைச்சரவையில் மாற்றம்
புதினம் -
இலங்கை அமைச்சரவையில் திடீர் மாற்றங்களை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார். அதி முக்கிய அமைச்சுக்களான வெளிவிவகாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதேவேளை வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்த்தன கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் ஒரே ஒரு பெண் அமைச்சராக...
National news
பவித்திராவின் பதவி பறிப்பு, சுகாதாரத்துறை அமைச்சராக கெஹலிய
புதினம் -
கடும் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் இலங்கை அமைச்சரவில் ஜனாதிபதி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். சுகாதார அமைச்சராக செயற்பட்ட பவித்திரா வன்னியாராச்சியின் பதவி பறிக்கப்பட்டு கெஹலிய ரம்புக்வெலவிற்கு சுகாதார அமைச்சுப் பதவியை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ளார். இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலையீட்டினால் பவித்ரா வன்னியாராச்சிக்கு போக்குவரத்து துறை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
World News
தலிபான்களின் பூரண கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான்
புதினம் -
ஏற்க்குறைய இருபது வருடங்களின் பின்னர் இஸ்லாமிய போராட்டக் குழுவான தலிபான்களின் முழுக் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் நாடு வீழ்ந்துள்ளது. அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க இராணுவம் முற்றாக வெளியேறிய பின்னர், தலிபான்கள் மெதுவாக ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கினர். எவ்வித எதிர்ப்புமில்லாமல் தலிபான்கள் முன்னேறி இறுதியாக தலைநகரான காபூலை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் காணி...
World News
ஹெய்ட்டியில் பாரிய பூகம்பம், 304பேர் உயிரிழப்பு
புதினம் -
கரீபிய நாடான ஹெய்ட்டியில் இடம்பெற்ற பாரிய பூகம்பத்தில் இதுவரை 304பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,800 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது. 7.2 மக்னிடியூட் அளவில் பதிவான பூகம்பத்தால் பல பாரிய கட்டடங்கள் தரை மட்டமாகியுள்ளன. ஹெய்ட்டி அதிபர் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இடிந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ள மக்களை...
National news
நாட்டை முடக்க ஜனாதிபதி மறுப்பு!!
புதினம் -
இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனாவால் நாளாந்த உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை சார்ந்த தரப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தரப்பினர் நாட்டை முழுமையாக முடக்கும்படி அரசாங்கத்திடம் வேண்டுகோள்விடுத்திருந்தனர். இருப்பினும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டை முடக்க மறுத்துள்ளாதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று கொரோனா செயலணியினருடன் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே ஜனாதிபதி...
National news
தொடரும் அவலம், இலங்கையில் 156பேர் உயிரிழப்பு
புதினம் -
வேகமாகப் பரவிவரும் டெல்டா வகை கொரோனாவால் இலங்கையில் 156பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்த 156 பேரில், முப்பது வயதிற்கும், அறுபது வயதிற்கும் இடைப்பட்ட 35பேரும் உள்ளடங்குகின்றனர். டெல்டா வகை கொரோனா விரைவாக நுரையீரலைத் தாக்குவதால், இளவயதினரும் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.இலங்கை வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக நிலவி...
Tamil Nadu News
கடற்படை தாக்குதல் தொடர்பாக தமிழக முதல்வர் கடிதம்
புதினம் -
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதைச் சுட்டிக்காட்டி, இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு செயல்படுவதை உறுதிசெய்யவும், இப்பிரச்சினைக்கு அரசியல்ரீதியான தீர்வுகாணவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்ராலின் அவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், ஒன்பது...
National news
இலங்கையில் கொரோனாவால் 82பேர் உயிரிழப்பு
புதினம் -
இலங்கையில் 82பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் தலமை அதிகாரி தெரிவித்துள்ளார்.முப்பது தொடக்கம் அறுபது வயதிற்கிடைப்பட்ட பதினான்கு ஆண்களும், எட்டுப் பெண்களும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 27 ஆண்களும், 33 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று ஏற்பட்டு இதுவரையில் இலங்கையில் 4,727 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வேகமாகப் பரவிவரும் டெல்டா...
World News
ஆஸ்திரேலியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
புதினம் -
ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பேர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகர்களில் மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ஆஸ்திரேலியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் விதித்த முடக்க நிலையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.சிட்டினியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் காவல்துறையினர் மீது போத்தல்களை வீசினர். கலகத்தில் ஈடுபட்ட 57பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை...
World News
ஆஸ்திரேலியாவிற்கான அமெரிக்க தூதுவராக கரோலின் கென்னடி !
புதினம் -
ஆஸ்திரேலியாவிற்கான அமெரிக்க தூதுவராக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி J.F.கென்னடியின் மகளான கரோலின் கென்னடி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கரோலின் கென்னடியின் பெயரை விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.பராக் ஒபாமாவின் ஆட்சியில் கரோலின் கென்னடி ஜப்பானிற்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
