புதினம்

இலங்கை விமானப்படைத் தளபதிக்கு கொரோனா

இலங்கையின் விமானப் படைத்தளபதியான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ராஜாங்க அமைச்சரான ஜானக வக்கும்புரவிற்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் முன்னாள் காவல்துறை பேச்சாளரான அஜித் ரோகணவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனாவினால் நாளுக்கு நாள் பாதிப்புகள்...

கொரோனா தொற்றால் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழப்பு

இலங்கை அரசியலில் முக்கிய அரசியல்வாதியாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று (24/08) உயிரிழந்தார். இறக்கும்போது அவருக்கு வயது 65. கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த மங்களவிற்கு நேற்று முன்தினமும், நேற்றும் அடுத்தடுத்து இடம்பெற்ற மாரடைப்பால் உயிர் பிரிந்தது. இலங்கையில் இடம்பெற்ற/இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற தாந்தோன்றித்தனமான ஆட்சியினை துணிச்சலுடன் வெளிப்படையாகவே விமர்சித்து...

இலங்கையில் அதிகரிக்கும் மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே உள்ளது. 23ம் திகதி மாலை 8:30 மணி வரையிலான அரச தரவுகளின்படி 4,355 புதிய தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொடங்கிய நாளிலிருந்து இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 394,355 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பிரதம சுகாதார சேவைகள்...

ஒரே நாளில் 4,304 தொற்றாளர்கள், 183 மரணங்கள்

இலங்கையில் ஒரே நாளில் 4,304 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனாவால், தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. 21ம் திகதிக்கான தரவுகளின்படி, இலங்கையில் மொத்தமாக 183 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,366...

இந்தியாவிலிருந்து 100 தொன் ஒக்சிஜன்

இந்திய கடற்படையின் சக்தி கப்பல் மூலம் 100 மெற்றிக்தொன் ஒக்சிஜன் இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதி ஒக்சிஜன் விரைவில் இலங்கை கொண்டுவரப்படுமென கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாளை இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்று சென்னையிலிருந்து 40 மெற்றிக்தொன் ஒக்சிஜனை கொண்டுவரவுள்ளது. இலங்கையில் வேகமாகப் பரவிவரும் டெல்டா வகை கொரோனாவால் வைத்தியசாலைகளில்...

பத்து நாட்களுக்கு இலங்கை முடக்கப்படுகிறது

டெல்டா வகை கொரோனா தொற்றின் தாக்கம் எல்லை மீறிச் செல்வதால், இலங்கை முற்றாக முடக்கப்படுகிறது. பலவித அழுத்தங்களின் பின்னர் இலங்கை அரசு நாடு தழுவிய முடக்கத்திற்கு சம்மதித்துள்ளது. இன்று (20/01) இரவு 10 மணிமுதல், 30ம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முடக்கப்படுவதாக இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்தியாவசிய...

கொரோனாவும், கோத்தாவும்

இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் பரவல் வேகமடைந்துள்ளது. வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் கோத்தபாய அரசு படுதோல்வி கண்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியர்கள், தாதிமார் என பலர், பலவகையான இன்னல்களுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து கொரோனாவுடன் போராடி வருகிறார்கள். ஆனால் அரசாங்கமோ இன்னொரு வழியில் பயணிக்கிறது. நாட்டில் பாடசாலைகள் பூட்டு, மாணவர்களின் கல்வி பாழ்பட்டுள்ளது....

ஹெய்டி பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த சனிக்கிழமை ஹெய்ட்டியில் இடம்பெற்ற பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,419 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கானாமல் போயுள்ளாதாக அஞ்சப்படுகின்றபோதிலும், சரியான எண்ணிக்கை இன்னும் தெரியாமலேயே உள்ளது. 7.2 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த பாரிய பூகம்பத்தால் பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களை தேடும் பணிகள் தொடந்த வண்ணம் உள்ளன. இதேவேளை...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 167பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனாவால் மேலும் 167பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 15ம் திகதிக்கான தரவாகும். இளவயதினரையும் கடுமையாகத் தாக்கி வரும் டெல்டா வகை கொரோனாவால் முப்பது வயதிற்குட்பட்ட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 167பேரில் 64 பெண்களும், 103 ஆண்களும் உள்ளடங்குவர்.

தலிபான் அரசை அனுசரிக்கும் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான்

ஆப்கானிஸ்தானை தமது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தலிபானுடன் இணைந்து செயற்பட சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற முக்கிய நாடுகள் முன்வந்துள்ளன. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் AFP செய்தி சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியில், ஆப்கானிஸ்தானுடன் ஆழமான உறவைப் பேணும் சந்தர்ப்பத்தை சீனா வரவேற்பதாகவும், தலிபான்கள் சீனாவுடனான உறவை வளர்ப்பதற்கான...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img