புதினம்

USD.800 மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

கடந்த நான்கு கிழமைகளாக இடம்பெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போரினால் உக்ரைனின் பல பகுதிகள் சுடுகாடாக மாறியுள்ளது. இது ஏறத்தாள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் இடம்பெற்ற கட்டிட மற்றும் சொத்து அழிவுகளுக்கு ஒப்பானது. தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் விமான குண்டு வீச்சினால் பெரும்பாலான கட்டிடங்கள் தரை மட்டமாகியுள்ளன. இவ்வாறான நிலையில் அமெரிக்கா வழங்கும் ஆயுத தளபாடங்களுடன் முதலாவது...

ரணிலிடம் மன்னிப்புக்கோரிய ஜனாதிபதி

இன்று(23/03) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவிடம் மன்னிப்புக் கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. "தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசுதான் காரணம்" என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இதனால் விசனமடைந்த ரணில் "இலங்கை சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளிற்கிணங்க நீங்கள் (ஜனாதிபதி)...

சீனாவில் பயணிகள் விமானம் விபத்து

சீனாவின் குவாங்ஸி மாநிலத்தில் China Eastern விமான சேவையின் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 123 பயணிகள் மற்றும் 09 விமான பணியாளர்களுடன் பயணித்த போயிங் 737-800 ரக பயணிகள் விமானமே விபத்துக்குள்ளானதாக சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழப்பு விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்து இடம்பெற்ற மலைப் பகுதியில் பாரிய தீ பரவியுள்ளது. மேலும் மீட்டுப் பணியாளர்கள்...

பால் தேநீர் 100 ரூபாய் 😥

இன்று (21/03) முதல் இலங்கையில் ஒரு குவளை பால் தேநீரின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பால்மா, சீனி, தேயிலை போன்ற பொருட்களின் விலை அதிகரிப்பினால், பால் தேநீரின் விலையும் அதிகரிக்கப்படுகிறது என தெரிவித்துள்ள இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கம், தற்போதைய...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம்

இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள பிரதமர் மகிந்தவிற்கு கண்டனம் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. மட்டுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்க, பிரதமர் வருகை தரும் வீதியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலிருந்து பேருந்துகளில் வந்த தாய்மார்களை, பேருந்தில் இருந்து இறங்க...

பிரதமரால் மட்டுவிலில் விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் யாழ் மட்டுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நேற்று (20/03) திறந்து வைக்கப்பட்டது. சுமார் 200 மில்லியன் ரூபாய் செல்வில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந் நிலையம், விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களுக்கு தகுந்த விலையினைப் பெற்றுக்கொள்ளவும், நுகர்வோர் மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களைப் பெற்றுக்கொள்ளவும் வசதியினை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. மட்டுவில் விசேட பொருளாதார நிலையத்திற்கு, பதுளை பொருளாதார...

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பாரிய மக்கள் ஊர்வலம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகளை அரசு முறையாகக் கையாளத் தவறியுள்ளதால், மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை கண்டித்து சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியான சமகி ஜன பலவேகய (SJB) பாரிய ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்றை கொழும்பில் மேற்கொண்டு வருகிறது. பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றியுள்ளனர். கொழும்பு பொது நூலகத்திற்கு அண்மையிலிருந்து...

பேருந்து சேவை கட்டணங்களும் உயர்வு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பேருந்து கட்டணங்களும் 15 வீதத்தினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவைகளில் 17 ரூபாயிலிருந்த ஆரம்ப கட்டணம்,  20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண அதிகரிப்பு முற்றுமுழுதாக டீசல் விலை உயர்வினால் ஏற்பட்ட கட்டண அதிகரிப்பாகும் என போக்குவரத்து அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இதேவேளை, நீண்ட...

1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழப்பு – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 1,300 உக்ரேனியப் படையினர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை இதுவரையில் 500 - 600 ரஷ்யப் படைகள் சரணடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தலைநகர் கிய்விலிருந்து 25km தூரத்தில் நிலைகொண்டுள்ள ரஷ்யப் படையினர், தமது பாரிய இராணுவ வாகன தொடரணியில் சில மாற்றங்களைச் செய்து, தலைநகரைக் கைப்பற்றும் போருக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், அதனை...

உக்ரேனிய மக்களுக்கான கூகுளின் சேவை

உக்ரேனிய அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கிணங்க, கூகுள் நிறுவனம் புதிய அம்சத்தை ஆன்ட்ரோய்ட் தொலைபேசிகளை பாவிக்கும் உக்ரேனிய மக்களுக்காக செயற்படுத்தியுள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் நடத்தப் போகும் தாக்குதல்களை மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய அம்சத்தைதான் கூகுள் நிறுவனம் உக்ரேனிய நாட்டு ஆன்ட்ரோய்ட் பாவனையாளர்களுக்காக செயற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூகுள் பூகம்பங்கள் ஏற்படப்போவதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவருகிறது. தற்போது...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img