அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்கொட் மொரிசன் பதவி ஏற்றார்

அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்கொட் மொரிசன் நேற்று (24/08) பதவியேற்றார்.

முன்னாள் பிரதமராக இருந்த மல்கம் டேர்ன்புல், லிபரல் கட்சியின் உறுப்பினர்களிடையே நம்பிக்கை இழந்ததால், புதிய தலைவராக ஸ்கொட் மொரிசன் தெரிவு செய்யப்பட்டார்.

தற்போது பிரதமராக பதவியேற்றுள்ள ஸ்கொட் மொரிசன், முன்னாள் குடிவரவு அமைச்சராக இருந்தபோது, அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக வரும் படகுகளை நிறுத்தியதன் மூலம் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles