1200kg போதைவஸ்தைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா காவல்துறை

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் ஜெரால்டோன் நகருக்கு அண்மையில் படகு மூலம் கொண்டுவரப்பட்ட 1200kg நிறையுடைய மெத்தம்பெட்டமைன் (methamphetamine) வகை போதைவஸ்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடத்தலுடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைவஸ்த்தின் பெறுமதி ஆஸ்திரேலிய டொலர்களில் 1.04 பில்லியன் ஆகும்.

Australia drug seize
(படம் : AFP/twitter)

ஆஸ்திரேலியா நாட்டில் இதுவரை கைப்பற்றிய மெத்தம்பெட்டமைன் வகை போதைவஸ்தில், இதுவே நிறை கூடியதாகும். இந்த வருட முற்பகுதியில் மெல்பேர்ன் நகரில் 903kg மெத்தம்பெட்டமைன் போதைவஸ்தை காவல்துறையினர் கைப்பற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles