130 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு

இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் 130 வகையான அத்தியாவசிய மருந்துகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

384 வகையான அத்தியாவசிய மருந்துகளில், 130 வகையான மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

14 வகையான அதிமுக்கிய உயிர் காப்பு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, அந்த மருந்து வகைகள் வரும் இரண்டு,மூன்று மாதங்களுக்கான கையிருப்பு மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தட்டுப்பாடு நிலவும் அனைத்து மருந்துகளையும் வரும் இரண்டு மூன்று கிழமைகளில் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles