ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது

சீன நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த குத்தகையின் பெறுமதி $1.12 பில்லியன் டாலர்கள் ஆகும். இதில் முதற் கொடுப்பனவாக $292 மில்லியன் டாலர்களை அந்நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதென நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். மிகுதிக் கொடுப்பனவுகள் வரும் ஆறு மாதங்களுக்குள் பெறப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

2010ம் ஆண்டு, $1.5 பில்லியன் மதிப்பீடு செய்யப்பட்ட இந்த துறைமுகம், ஒழுங்கான கப்பற் போக்குவரத்துகள் இல்லாமையால் நட்டத்தில் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனாவினால் தெற்காசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த துறைமுகம் மிக உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles