சீனா தாய்வானை ஆக்கிரமிக்கும் என நான் நம்பவில்லை – அமெரிக்க ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

G20 உச்சி மாநாட்டில் பங்கு பெற பாலி நகர் வந்துள்ள சீன மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் நேருக்கு நேர் சுமார் மூன்று மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீனாவின் தாய்வான் ஆக்கிரமிப்பு விவகாரம் அமெரிக்கா மற்றும் சீனா உறவில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்த இரு நாட்டு தலைவர்களும் இணங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், சீனா தாய்வானை ஆகிரமிக்கும் என தான் நம்பவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுடன் இனி பனிப்போர் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles