303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முற்பட்ட கப்பல் விபத்து

வியட்நாம் கொடி தாங்கிய கப்பல் (Lady R3) ஒன்று விபத்துக்குள்ளானதாக தமக்கு தகவல் கிடைத்ததாக வியட்நாமின் கடல் மற்றும் கப்பல்கள் கண்பாணிப்பு நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் 303 இலங்கையர்களுடன் கனடா நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான கப்பலில் இருந்தவர்களை ஜப்பான் கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாகவும், காப்பாற்றப்பட்டவர்கள் இன்று(08/11) வியட்நாமின் வுங் டோவ் பகுதியை வந்தடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கப்பலில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என 303 இலங்கையர்கள் இருந்துள்ளனர். கப்பலில் பயணித்தவர்கள் தொடர்பாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வியட்நாம் அரசுடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles