அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மற்றும் இலஞ்சம் பெறல் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க 1905 எனும் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த துரித தொலைபேசி இலக்கத்திற்கு, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் தெரியப்படுத்தலாம்.
