சஜித் பிரேமதாசாவை தொலைபேசியில் மிரட்டும் நபர்கள்

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கு சிலர் தொலைபேசியில் மிரட்டல் அழைப்புக்களை மேற்கொண்டுவருவதாக அவர் நேற்று(29/04) இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசில் ஐக்கிய மக்கள் சக்தியை இணையும்படியும், அவ்வாறு இணையாவிடின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள் எனவும் மிரட்டல் அழைப்புக்கள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவி விலகிய பின்னரே நாம் இடைக்கால அரசில் இணைவோம் என சஜித் பிரேமதாசா ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles