பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் – டலஸ் அழகப்பெரும

பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவி விலகி, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டுமென முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாத்தறை மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட டலஸ் அழகப்பெரும, மகிந்த அரசில் முக்கிய புள்ளியாகத் திகழ்பவர். இவரது இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நாட்களில் அரசின் மேலும் சில முக்கிய உறுப்பினர்கள் அரசிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சாத்தியம் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles