உலகின் பிரபல OTT தளமான (திரைப்படங்கள் மற்றும் நாடகங்களின் சேவைகளை வழங்கும் தளம்) நெட்பிளிக்ஸின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 200,000 வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு கடந்த பத்து வருடங்களில் முதன்முறையாக ஏற்பட்ட வீழ்ச்சியாகும். மேலும் வரும் காலாண்டுப் பகுதியில் மேலும் வாடிக்கையாளர்களை நெட்பிளிக்ஸ் இழக்கும் சாத்தியம் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இந்நிறுவனம் மேற்கொண்ட கட்டண உயர்வு மற்றும் ரஷ்ய-உக்ரேன் போரின் காரணமாக அந்நாடுகளில் சேவை இடைநிறுத்தம் போன்ற காரணங்களே வாடிக்கையாளர்களின் வீழ்ச்சிக்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வீழ்ச்சி காரணமாக நெட்பிளிக்ஸின் பங்குச் சந்தைப் பெறுமதி 26% இனால் வீழ்ச்சியடைதுள்ளது.