எட்டாவது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டம், வேடுவ இனத்தவரும் இணைந்தனர்

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைப் பதவி விலகச் சொல்லி கொழும்பு காலி முகத்திடலில் இளையோரால் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்று எட்டாவது நாளாகத் தொடர்கிறது.

அரசியல் தலையீடு இன்றி இடம்பெற்றுவரும் இந்த ஆர்ப்பாட்டம் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இந்த அமைதி வழி ஆர்ப்பாட்டதில், நேற்று வேடுவர் சமூகமும் தம்மை இணைந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தமது ஆதரவை தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles