100,000 இலவச பயணச் சீட்டுக்களை வழங்கும் விமான நிறுவனம்

உக்ரைனில் இருந்து இடம்பெயரும் அகதிகளின் நலன் கருதி, ஹங்கேரி நாட்டு விமான நிறுவனமான Wizz Air 100,000 பயணச் சீட்டுக்களை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ரோமானியா போன்ற நாடுகளில் இருந்து புறப்படும் Wizz Air விமானங்களிலேயே இந்த இலவச பயணச் சீட்டுகள் வழங்கப்படுவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரையில் உக்ரைனிலிருந்து 660,000பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles