மசகு எண்ணையின் விலை பெருமளவில் அதிகரிப்பு

மசகு எண்ணையின் விலை ஒரு பீப்பா 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி அதிகரித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பதற்றத்தினால் மசகு எண்ணையின் விலை இன்று வியாழன் 101 அமெரிக்க டொலர்களைத் தாண்டிச் சென்றது.

ஏற்கனவே கடந்த இரு வருடங்களாக கொரோனாவின் பரவலால் எண்ணையின் விநியோகம் உலகம் முழுவதும் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருந்தது. ரஷ்யா-உக்ரைன் போர்ச் சூழல் தொடருமெனில் உலகம் முழுவதும் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே இலங்கையில் எரிபொருள் இறக்குமதிக்கான பணம் செலுத்த முடியாத நிலையில் எரிபொருள் பற்றாகுறை நிலவி வரும் இவ்வேளையில், உலகளவில் எரிபொருள் வழங்கலில் பாதிப்பு ஏற்படுமெனில் இலங்கையின் நிலமை மிக மோசமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles