4 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை வழங்கும் சீனா

இலங்கைக்கு 4 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை சீனா வழங்குகின்றது. மேற்படி தடுப்பூசிகள் நாளை (04/09) இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/ChinaEmbSL/status/1433462753583243264

மேலும், சீன அரசாங்கம் இதுவரை 22 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இது ஏறக்குறைய இலங்கையின் மொத்த சனத்தொகைக்கு சமனானதாகும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles