டெல்டா வகை கொரோனா தொற்றின் தாக்கம் எல்லை மீறிச் செல்வதால், இலங்கை முற்றாக முடக்கப்படுகிறது. பலவித அழுத்தங்களின் பின்னர் இலங்கை அரசு நாடு தழுவிய முடக்கத்திற்கு சம்மதித்துள்ளது.
இன்று (20/01) இரவு 10 மணிமுதல், 30ம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முடக்கப்படுவதாக இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் இடம்பெறுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பெளத்த மஹாநாயக்கர்கள், அனைத்து எதிர்கட்சிகள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த நிபுணர்கள் பல தடவை நாட்டை முடக்கும்படி வேண்டுகோள் விடுத்தும் இலங்கை அரசு செவிசாய்த்திருக்கவில்லை. இருப்பினும் பெளத்த மஹாநாயக்கர்களின் அதியுச்ச அழுத்தத்தினால், ஜனாதிபதி நாட்டை முடக்க சம்மதித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.