பாலியல் தொல்லைகளினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் சிறுவர்களிடம் தேசிய மன்னிப்பு கேட்கிறது ஆஸ்திரேலியா

தேவாலயங்கள், பள்ளிகள், விளையாட்டு மன்றங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பல பத்தாண்டுகளாக நிகழ்ந்த சிறுவர்கள் மீதான பாலியல் தொந்தரவிற்கு தேசிய மன்னிப்பு இந்தாண்டு இறுதியில் கோரப்படும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் மல்கம் டேர்ன்புல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நிறுவனங்களில் சிறுவர்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு மீது நடந்த நான்காண்டு கால விசாரணையில் பல்லாயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தேசிய மன்னிப்பு குறித்த அவரது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த சம்பவங்களை ஏதோ சில அழுகிய ஆப்பிள்கள் என்று புறக்கணித்துவிட முடியாது. சமூகத்தின் பெரிய நிறுவனங்கள் மோசமாகத் தோல்வியடைந்துள்ளன,” என்று பிரதமர் மல்கம் டேர்ன்புல் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான குறைதீர்வுத் திட்டத்தில் இணையும்படி அவர் மாநில அரசுகளையும், நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசு ஏற்கெனவே 3 கோடி ஆஸ்திரேலிய டாலர்களை இந்த திட்டத்துக்கு ஒதுக்கியுள்ளது. பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 1.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் வழங்கப்படுவதோடு, இந்த நிதியில் இருந்து ஆலோசனைகளும் பிற சேவைகளும் வழங்கப்படும்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles