மக்களின் பணத்தை தமக்கேற்றவகையில் பாவித்த மஹிந்த அரசு

​​பாராளுமன்றில் நேற்று உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கா, கடந்த அரசாங்கத்தில் மக்களின் பணத்தை தமக்கேற்றவகையில் பாவித்தார்கள் என்று குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹிந்த ஆட்சியில் திறைசேரி கொடுக்கல் வாங்கல்களில் நடைபெற்ற ஊழலில் 806 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது. ‘ஹெஜ்ஜிங்’ கொடுக்கல் வாங்கல்களில் 1140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தல் விளம்பரத்திற்காக ITN தொலைக்காட்சிக்கு 23 கோடி ரூபா கொடுக்கப்படவேண்டியுள்ளது என கடந்த அரசாங்கத்தின் ஊழல்களை பட்டியலிட்டார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles