பிரதமரை பதவி நீக்கம் செய்தமை, பாராளுமன்றத்தைக் கலைத்தமை எல்லாமே சட்டத்திற்கு முரணானவை என முன்னாள் நீதியரசரும், முன்னாள் வடமாகாண முதல்வருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒரு அனுபவம் வாய்ந்த நீதியரசரே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் எனின், அதில் உண்மை இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இருப்பினும், ஐக்கிய தேசியயக்கட்சியோ அல்லது வேறு பிரதான கட்சிகளோ நீதிமன்றில் வழக்கு தொடராமல் இருப்பது, சாதாரண மக்களுக்கு அதாவது வாக்களித்த மக்களுக்கு, இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.