நான்கு மாணவிகள் தற்கொலை, தலைமை ஆசிரியை உட்பட இருவர் தற்காலிக பணி நீக்கம்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே, பனப்பாக்கம் அரசு பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிகளான தீபா, மனிஷா, சங்கரி மற்றும் ரேவதி ஆகியோர் கடந்த வெள்ளியன்று (24-11) பள்ளிக்கு அருகில் இருந்த 83 அடி ஆழக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.

மாணவிகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பெற்றோர்கள் கூறியதையடுத்து, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அவர்கள் பயின்று வந்த பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரியை ஒருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles