அமைச்சர்களை நீக்கியமை தவறு – வாசுதேவ நாணயக்கார

அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரது அமைச்சுப் பதவிகளை சடுதியாக நீக்கியது தவறான செயலாகும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு நீதி கிடைக்கும்வரை தான் அமைச்சராக கடமையாற்றுவதை தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாகவும் தெரிவித்த வாசுதேவ நாணயக்கார, எந்தவொரு அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்குபற்றப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இன்று (04/03) அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles