ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் தற்போது தூத்துக்குடி பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களும் குதித்துள்ளதால் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி கல்லூரி மாணவர்களையடுத்து மேலும் பல கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிக்க சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உற்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்துள்ளது மட்டுமின்றி இன்னொரு ஆலை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இந்த பிரச்சனை குறித்து மத்திய மாநில அரசுகள் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles