இலங்கையின் முதல் தனியார் சிங்கள தொலைக்காட்சியான TNLஇன் பொல்கஹவெல நிலையம் இலங்கை தொலை தொடர்பு ஆணைக்குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொலைகாட்சி நிறுவனத்தின் பன்பலை வானொலியான ‘இசிரா’ வானொலியின் கலையக கருவிகளை, தொலைத் தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகள் எடுத்து செல்ல முற்பட்டதாக TNL நிறுவனத்தின் முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.
TNL தொலைக்காட்சி நிறுவனம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரரிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.